/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருத்துவமனை பூட்டை உடைத்து ரூ.1.15 லட்சம் திருட்டு
/
மருத்துவமனை பூட்டை உடைத்து ரூ.1.15 லட்சம் திருட்டு
மருத்துவமனை பூட்டை உடைத்து ரூ.1.15 லட்சம் திருட்டு
மருத்துவமனை பூட்டை உடைத்து ரூ.1.15 லட்சம் திருட்டு
ADDED : பிப் 05, 2025 10:28 PM

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பில் தனியார் பல் மருத்துவமனை பூட்டை உடைத்து 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்ட துணிகர சம்பவம் நடந்தது.
சேத்தியாத்தோப்பு பஸ் ஸ்டேண்ட் அருகே வேல்ஸ் பல் மருத்துவமனை உள்ளது. டாக்டர் சக்திபாலன் நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் மருத்துவமனையை மூடிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை 7.00 மணியளவில் மருத்துவமனையை திறப்பதற்கு வந்தபோது, மருத்துவமனையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வைத்திருந்த பணம் 1 லட்சத்து 15 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.