ADDED : மார் 18, 2026 05:12 AM

விருத்தாசலம்: திராட்சை வியாபாரியிடம் 1.17 லட்சம் ரூபாயை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில், விருத்தாசலம் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் சுபாஷ்சந்திரபோஸ் தலைமையிலான பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, விருத்தாசலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மார்க்கமாக சென்ற டாடா ஏஸ் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணமின்றி 1 லட்சத்து 17 ஆயிரத்து 300 ரூபாய் எடுத்துச் சென்றது தெரிந்தது.
விசாரணையில், திராட்சை வியாபாரியான தேனி மாவட்டம், உத்தமபாளையம், சின்னமனுார் முத்தையா மகன் பூங் கொடி, 64, என்பவர் விருத்தா ச லம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் திராட்சை விற்பனை செய்த தொகையை பெற்றுச் செல்வது தெரிந்தது.
தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், விருத்தாசலம் தாசில்தார் பிரகாஷ் முன்னிலையில் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆவணங்களை சமர்பித்து, பணத்தை பெற்றுச் செல்ல பூங்கொடியிடம் அறிவுறுத்தப்பட்டது.
