/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 1.22 கோடியில் முக்குளம் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்: விரைந்து முடிக்க பெண்ணாடம் மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : செப் 24, 2024 06:09 AM

கடலுார் மாவட்டத்தில், பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சியாகவும், வருவாய் குறுவட்டத்தின் தலைமையிடமாகவும் உள்ளது. இங்குள்ள 15 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும், விரிவாக்கப்பட்ட நகர் பகுதிகளும் உள்ளது.
இப்பகுதி முதியோர், இளைஞர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வயல்வெளிகள், நெடுஞ்சாலை பகுதிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் முறையாக நடைபயிற்சியில் ஈடுபட முடியாததும், சாலை பகுதியில் நடந்து செல்லும்போது வாகன விபத்துகளில் சிக்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
பெண்ணாடம் பேரூராட்சி பகுதி மக்கள், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் நடைமேடையுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று கடந்தாண்டு, கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 1 கோடியே 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்காக பெ.கொல்லத்தங்குறிச்சி சாலையோரம் உள்ள முக்குளம் தேர்வு செய்யப்பட்டது. கடந்த 5 மாதங்களுக்கு முக்குளம் துார்வாரும் பணி, தொடர்ந்து கரைகள் பலப்படுத்துதல்.
சுவர்களில் கான்கிரீட் கல் பதித்தல், நடைபாதை அமைத்தல், பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும், விரைவில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழைக்கு முன் முக்குளம் பூங்கா அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர் கூறுகையில், 'முக்குளத்தில் நடைமேடையுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இந்த பூங்கா பயன்பாட்டிற்கு வந்தால் பெண்ணாடம் பேரூராட்சி வார்டு மக்கள் மட்டுமின்றி அருகிலுள்ள பெ.கொல்லத்தங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களும் நடைபயிற்சி மேற்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்'.
இவ்வாறு அவர் கூறினார்.