ADDED : மார் 29, 2026 05:17 AM

அ நிறம் | அளவு
கடலுார்: ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட, ஒரு லட்சத்து 30ஆயிரம் ரூபாயை நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடலுார் அடுத்த ரெட்டிச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு தேர்தல் நிலை கண்காணிப்புகுழு அலுவலர் கலாவதி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் வந்த சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், உரிய ஆவணங்களின்றி ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாய் எடுத்து வந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடலுார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
