ADDED : மார் 29, 2026 05:19 AM

விருத்தாசலம்: ஆவணங்களின்றி பைக்கில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.80 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் சட்டசபை தொகுதி நிலை கண்காணிப்பு அதிகாரி சுகன்யா தலைமையில், போலீசார் சுகுணா, அன்பரசன் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டினம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த, உடையார்பாளையம், வெட்டியா வெட்டு பகுதியை சேர்ந்த குலோத்துங்கசோழன் என்பவரிடம் கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர்.
அதில், உரிய ஆவணங்கள் இன்றி, ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 850 ரூபாய் ரொக்கம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், விருத்தாசலம் துணை தாசில்தார் அன்புராஜிடம் ஒப்படைத்தனர்.
அதன்பின், அந்த பணம் விருத்தாசலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
