/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 39.19 கோடி வெள்ள நிவாரணம்; கடலுாரில் அமைச்சர் துவக்கி வைப்பு
/
ரூ. 39.19 கோடி வெள்ள நிவாரணம்; கடலுாரில் அமைச்சர் துவக்கி வைப்பு
ரூ. 39.19 கோடி வெள்ள நிவாரணம்; கடலுாரில் அமைச்சர் துவக்கி வைப்பு
ரூ. 39.19 கோடி வெள்ள நிவாரணம்; கடலுாரில் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : டிச 07, 2024 07:32 AM

கடலுார்; கடலுாரில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
கடலுார் மற்றும் பண்ருட்டி தாலுகாவில் புயலால் பாதித்த 1லட்சத்து 96 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2,000 வீதம் நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சி கடலுார் குண்டு உப்பலவாடியில் நடந்தது.
அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கண்காணிப்பு அலுவலர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'வெள்ளத்தால் பாதித்த கடலுார், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண் துறையை சேர்ந்த 79,086 எக்டர் நிலங்களும், தோட்டக்கலை துறையை சேர்ந்த 4,526 எக்டர் நிலங்களும் மழைநீரால் சூழப்பட்டுள்ளதை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.
கடலுார் தாலுகாவில் 188 ரேஷன் கடைகள் மூலமாக 1 லட்சத்து 24 ஆயிரத்து 896 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பண்ருட்டி தாலுகாவில் 105 ரேஷன் கடைகள் மூலமாக 64,471 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், குறிஞ்சிப்பாடி தாலுகாவில் 17 ரேஷன் கடைகள் மூலமாக 6,616 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் என மொத்தம் 310 ரேஷன் கடைகள் 1 லட்சத்து 95 ஆயிர்து 983 ரேஷன் அட்டைதாரர்களுக்கு 39 கோடியே 19 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இதனுடன் 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பும் சேர்த்து வழங்கப்படும்' என்றார்.
அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகர மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரை செல்வன், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் இந்துமதி, கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் ரவிசந்திரன், ஆர்.டி.ஓ., அபிநயா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஷபானா அஞ்சும் உட்பட பலர் உடனிருந்தனர்.