/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு ரூ.19.69 கோடி பட்டுவாடா
/
எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு ரூ.19.69 கோடி பட்டுவாடா
எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு ரூ.19.69 கோடி பட்டுவாடா
எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு ரூ.19.69 கோடி பட்டுவாடா
ADDED : ஆக 05, 2025 01:50 AM
கடலுார்: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024-25ம் ஆண்டு அரவைக் கரும்பு கிரையம், அரசு ஊக்கத் தொகை ரூ. 19.69 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கடலுார் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் 2024-25ம் ஆண்டு கரும்பு அரவை கடந்த ஜன., 6ம் தேதி துவங்கி மார்ச் 10ம் தேதி நிறுத்தப்பட்டது.
இந்த ஆண்டு அரவைப் பருவத்தில் 896 அங்கத்தினர்கள் மூலம் 56,263.552 மெட்ரிக் டன் கரும்பு அரவைக்கு விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டது.
மத்திய அரசின் ஆதார விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,151 வீதம் 56,263.552 மெட்ரிக் டன்னுக்கு உண்டான கரும்பு கிரயத் தொகை 17.73 கோடி ரூபாய் பணத்தை அரசு, சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த மே மாதம் 24ம் தேதியில் நிலுவை பாக்கித் தொகை ஏதுமில்லால் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு கரும்பு அரவைப் பருவத்திற்கு கரும்பு அனுப்பிய 896 கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம், 56,263.552 மெட்ரிக் டன்னுக்கு 19.69 கோடி ரூபாயை அரசு நேரடியாக சர்க்கரை ஆலை மூலம் அனைத்து கரும்பு விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வைத்துள்ளது.