/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.2 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் துவக்கம்
/
ரூ.2 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் துவக்கம்
ADDED : பிப் 13, 2026 05:08 AM

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றியத்தில் ரூ.2 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் துவங்கின.
சிறுபாக்கம் அடுத்த மங்களூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டித்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதற்கான கட்டுமான பணி துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, பூமி பூஜையுடன் கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார். மேலும், ரூ., 10 லட்சத்தில் கட்டப்பட்ட விழா மேடையை திறந்து வைத்தார்.
அப்போது, மங்களூர் அட்மா குழு தலைவர் செங்குட்டுவன், ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், தாசில்தார் செந்தில்வேல், மங்களூர் பி.டி.ஓ., சண்முக சிகாமணி, தி.மு.க., மங்களூர் ஒன்றிய செயலர் சின்னசாமி, நிர்வாகிகள் சேகர், திருவள்ளுவன், ராமதாஸ், ராஜசேகர், குமணன், பொறியாளர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அமைச்சர் கணேசன் பேசியதாவது.,
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகிறார். மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விநாயகனந்தல், ரெட்டாக்குறிச்சி, மங்களூர், மா.புதுார், சிறுகரும்பலுார் உட்பட உட்பட, 11 ஊராட்சிகளில் ரூ., 2 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள், 45 நாட்களில் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் வினியோகம் நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

