/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 2 லட்சம் நகை திருட்டு கடலுாரில் துணிகரம்
/
ரூ. 2 லட்சம் நகை திருட்டு கடலுாரில் துணிகரம்
ADDED : மே 21, 2025 05:12 AM
கடலுார் : வீடு புகுந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், கோண்டூரைச் சேர்ந்தவர் சங்கர்,59; நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வேலைக்கு சென்றார். அவரது மனைவி காஞ்சனா வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். இரவு 8:30 மணிக்கு காஞ்சனா வீட்டிற்கு வந்த போது, முன்பக்க கதவு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டரை சவரன் செயின், ஒரு சவரன் கம்மல், வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.