/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காரில் ரூ.2 லட்சம் மது கடத்தல்: கடலுாரில் இளம்பெண் கைது
/
காரில் ரூ.2 லட்சம் மது கடத்தல்: கடலுாரில் இளம்பெண் கைது
காரில் ரூ.2 லட்சம் மது கடத்தல்: கடலுாரில் இளம்பெண் கைது
காரில் ரூ.2 லட்சம் மது கடத்தல்: கடலுாரில் இளம்பெண் கைது
ADDED : ஜன 25, 2024 06:36 AM

கடலுார், : புதுச்சேரியில் இருந்து தியாகதுருகத்திற்கு காரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபானம் கடத்திய இளம்பெண்ணை கடலுாரில் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து கடலுார் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு மதுபானம் கடத்துவதாக சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சின்னகமணன், சப் இன்ஸ்பெக்டர்கள் இனயத்பாஷா, நகராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கடலுார் ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து இளம் பெண் ஓட்டி வந்த பிஒய்-01-ஏஎம்4243 பதிவெண் கொண்ட இண்டிகா காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், கார் டிக்கி மற்றும் சீட் பகுதியில் 12 அட்டை பெட்டிகளில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 576 புதுச்சேரி மதுபான பாட்டில்களை கடத்தி வந்ததை கண்டுபிடித்து காருடன் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், காரை ஓட்டி வந்த பெண் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சந்தைமேடு கோவிந்தராஜ் மனைவி விஜயா,34; என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் வாங்கி தியாகதுருகத்திற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
அதன்பேரில் கடலுார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விஜயாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.