ADDED : மார் 22, 2026 06:26 AM
அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: வியாபாரியிடம் இருந்து ரூ.2,03 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் பறக்கும் படை அலுவலர் பாபு தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வீராணம் ஏரிக்கரை கலியமலை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது
கோழி முட்டை ஏற்றி சென்ற லாரியை மறித்து சோதனை செய்தனர்.
லாரியில் முட்டை வியபாரி நாமக்கல் மாவட்டம் மோகனுார் அடுத்த வடிவேல் கவுண்டனுாரைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவரிடம் இருந்து ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற ரூ.2,03 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பணத்தை தேர்தல் நடத்தும் அதிகாரி ராணி, மற்றும் தாசில்தார் பிரகாஷிடம் ஒப்படைத்தனர்.
