/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விரிவுரையாளர் மொபட்டில் ரூ.2.57 லட்சம் திருட்டு
/
விரிவுரையாளர் மொபட்டில் ரூ.2.57 லட்சம் திருட்டு
ADDED : ஜன 13, 2025 03:58 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் மொபட்டில் 2.57 லட்சம் மதிப்பிலான நகை, ரொக்கத்தை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம், ஆலடி ரோடு, பாரதி நகரை சேர்ந்தவர் எழிலசரன் மனைவி மாலதி, 36. கொளஞ்சியப்பர் அரசு கல்லுரியில் கவுரவ விரிவுரையாளர்.
கடந்த செப்டம்பர் 8ம் தேதியன்று, வீட்டிலிருந்து ஐந்தரை சவரன் நகைகளை, இந்தியன் வங்கியில் அடகு வைத்த மாலதி, ஒரு சவரன் கைச்செயினுடன் மொபட் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்குள் சாப்பிட சென்றார்.
திரும்பி வந்தபோது பெட்டி திறக்காததால், அருகிலுள்ள மெக்கானிக் கடையில் பைக் பெட்டியை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த 2 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் கைச்செயின் திருடுபோனது தெரிய வந்தது.
இது குறித்து மாலதி புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.