/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 5000 பொங்கல் போனஸ்; பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
/
ரூ. 5000 பொங்கல் போனஸ்; பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
ரூ. 5000 பொங்கல் போனஸ்; பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
ரூ. 5000 பொங்கல் போனஸ்; பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜன 03, 2024 06:24 AM
கடலுார்: தமிழக அரசு பொங்கல் போனஸ் 5,000 ரூபாய் வழங்க வேண்டுமென, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறினார்.
கடலுாரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் நிர்வாகத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது நடைமுறையில் உள்ளது.
கடந்தாண்டு 'சி' மற்றும் 'டி,' பிரிவு பணியாளர்களுக்கு 30 நாள் ஊதியத்தை போனசாக வழங்கவும், அதிகபட்சமாக 3,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
கீழ் நிலை பணியாளர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்தாண்டு விலைவாசி உயர்வு, சமூக செலவினங்களை கருத்தில் கொண்டு 'சி' மற்றும் 'டி,' பிரிவு பணியாளர்கள் மட்டுமின்றி 'பி' பிரிவு பணியாளர்கள், கீழ் நிலை பணியாளர்களுக்கும் 5,000 ரூபாய் போனஸ் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்கள் மட்டுமின்றி கீழ் நிலை பணியாளர்கள், 'பி' பிரிவு பணியாளர்களுக்கு போனஸ் 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
குறிப்பாக, ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் துாய்மை காவலர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு போனஸ் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். மாநில பொருளாளர் சரவணன், மாவட்டத் தலைவர் இருதயராஜ் உடனிருந்தனர்.