தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மங்கலம்பேட்டையில்  ரூ.60 ஆயிரம் பறிமுதல்

 மங்கலம்பேட்டையில்  ரூ.60 ஆயிரம் பறிமுதல்

 மங்கலம்பேட்டையில்  ரூ.60 ஆயிரம் பறிமுதல்


ADDED : மார் 26, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலை, மங்கலம்பேட்டையில் பறக்கும்படை அதிகாரி பவதாரணி தலைமையில் ஏட்டுகள் தமிழரசன், நேசமணி ஆகியோர் நேற்று மதியம் 1:30 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, விருத்தாசலத்தில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி மொபட்டில் சென்ற பெண்ணை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், அவர், உளுந்துார்பேட்டை நகர் கிராமத்தை சேர்ந்த கார்மேகவண்ணன் மனைவி சுமதி, 32; என்பதும், உரிய ஆவணங்களின்றி 60 ஆயிரம் ரூபாய் எடுத்து சென்றதும் தெரிந்தது.

அவரிடமிருந்து ரொக்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், விருத்தாசலம் துணை தாசில்தார் விஜயா முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us