தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மங்கலம்பேட்டையில்  ரூ.69,280 பறிமுதல்

 மங்கலம்பேட்டையில்  ரூ.69,280 பறிமுதல்

 மங்கலம்பேட்டையில்  ரூ.69,280 பறிமுதல்


ADDED : மார் 25, 2026 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட, 69 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் பறக்கும்படை அதிகாரி பவதாரணி தலைமையில் ஏட்டுகள் தமிழரசன், நேசமணி ஆகியோர் நேற்று மதியம் 1:30 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, உளுந்துார்பேட்டை - விருத்தாசலம் வழியாக மொபட்டில் வந்த முதியவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவர், விருத்தாசலம் வீரபாண்டியன்தெரு ஆறுமுகம் மகன் தண்டபாணி, 56; என்பதும், உரிய ஆவணங்களின்றி 69,280 ரூபாய் எடுத்து சென்றதும் தெரிந்தது.

அவரிடமிருந்து ரொக்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், விருத்தாசலம் துணை தாசில்தார் விஜயா முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us