/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 9000 குறைந்தபட்ச ஓய்வூதியம் ஓய்வூதியர்கள் கோரிக்கை
/
ரூ. 9000 குறைந்தபட்ச ஓய்வூதியம் ஓய்வூதியர்கள் கோரிக்கை
ரூ. 9000 குறைந்தபட்ச ஓய்வூதியம் ஓய்வூதியர்கள் கோரிக்கை
ரூ. 9000 குறைந்தபட்ச ஓய்வூதியம் ஓய்வூதியர்கள் கோரிக்கை
ADDED : செப் 29, 2024 06:57 AM

கடலுார் : ஓய்வூதியர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ9,000 வழங்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடலுாரில், மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் 66ம் ஆண்டு விழா மஞ்சக்குப்பம் திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க கவுரவத் தலைவர் ராஜாராம் தலைமை தாங்கி சங்க கொடியை ஏற்றினார். துணைத் தலைவர் நடராஜன் வரவேற்றார்.
இணை செயலாளர் சண்முகம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் முகுந்தன் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார். சங்க மாநில நிர்வாகிகள் மாணிக்கம், முத்துக்குமரவேலு, பிரகாஷ் பேசினர்.
முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கருவூல அலுவலர்கள் சுஜாதா, சரவணன், வங்கி மேலாளர்கள் ஸ்ரீராம்குமார், சரவணன், பிரபாகரன் வெங்கட்ராமன், நாகரத்தினம் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
சங்க நிர்வாகிகள் கலியபெருமாள், சிவானந்தம், தேவசேனாதிபதி, முகமது இப்ராகிம், பன்னீர்செல்வம், ஜெயபாலன், வெங்கடாஜலபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையை ரூ.1000 உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்குவது போன்று தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9,000 வழங்க வேண்டும். அரசு ஊழியரின் கடைசி ஊதியத்தில் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்குவதை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும். வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.