/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 96 லட்சம் செலவில் சுப்புராயலு பூங்கா சீரமைப்பு
/
ரூ. 96 லட்சம் செலவில் சுப்புராயலு பூங்கா சீரமைப்பு
ரூ. 96 லட்சம் செலவில் சுப்புராயலு பூங்கா சீரமைப்பு
ரூ. 96 லட்சம் செலவில் சுப்புராயலு பூங்கா சீரமைப்பு
ADDED : நவ 15, 2024 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் சுப்புராயலு பூங்கா, ரூ. 96 லட்சம் செலவில் சீரமைப்பு பணி துவங்கியது.
கடலுார் சுப்புராயலு பூங்காவை அகலப்படுத்தி சீரமைக்க ரூ.96 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சீரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் அனு தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை
துவக்கி வைத்தனர். அப்போது, மண்டல குழு தலைவர் சங்கீதா, கவுன்சிலர் சுபாஷினி, அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.