தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.55,400 பறிமுதல்

 ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.55,400 பறிமுதல்

 ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.55,400 பறிமுதல்


ADDED : மார் 18, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட, 55ஆயிரத்து 400 ரூபாயை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

கடலுார் அடுத்த திருப்பணம்பாக்கம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் முரளிதரன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த திருக்கண்டேஸ்வரத்தைச் சேர்ந்த நாகப்பன் மகன் அய்யனார்,44, என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவரிடமிருந்த 55ஆயிரத்து 400 ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிய ஆவணங்களை கேட்டனர். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்தை, கடலுார் தாலுகா அலுவலகத்தில் கூடுதல் தலைமையிடத்து துணைதாசில்தார் ஷோபாவி டம் ஒப்படைத்தனர்.

உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அய்யனாருக்கு அதிகாரிகள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us