/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு
/
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு
ADDED : செப் 27, 2024 04:58 AM
சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப் பட்டதால், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில், வரும் அக்டோபர் 6ம் தேதி, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஊர்வலத்திற்கு அனுமதி கோரி, மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன், சிதம்பரம் போலீசில் கடிதம் வழங்கினார்.
ஊர்வலத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
நேற்று மனு விசாரணையின்போது, ஊர்வலம் நடந்தால் அச்சுறுத்தல் ஏற்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய ஆர்.எஸ். எஸ்., முடிவு செய்துள்ளது.