/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி பஸ் நிலையம் திறப்பு விழா ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

ADDED : பிப் 17, 2024 05:07 AM
திட்டக்குடி : திட்டக்குடி நகராட்சியில் பணிகளை முழுமையாக முடிக்காமல், பஸ் நிலையம் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
திட்டக்குடி நகராட்சி பஸ்நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நிழற்குடை அமைக்கும் பணி ஒரு வருடத்திற்கு முன் துவக்கப்பட்டது. அதற்காக அப்பகுதியில் இருந்த இலவச கழிவறை அகற்றப்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஒரு வருடமாக நடைபெற்ற நிழற்குடை பணிகள், முழுமையாக முடியாத நிலையில் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடையை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார். பஸ்நிலைய திறப்பு விழாவிற்கு நகராட்சி நிர்வாகம் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலர் அழைப்பு விடுக்கவில்லை எனக்கூறி, விழாவை புறக்கணித்தனர்.
பஸ்நிலைய பணிகள் குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'பஸ்நிலையத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டதைத் தவிர வேறு எந்தப்பணிகளும் நடக்கவில்லை. பொதுமக்கள் பயன்படுத்த கழிவறை, குடிநீர் வசதி, போதுமான மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் போதை ஆசாமிகள், திருடர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், அகற்றப்பட்ட புறக்காவல்நிலையத்திற்கு பதில், புதிதாக கட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்றனர்.