தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஊரக வளர்ச்சித் துறையினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ஊரக வளர்ச்சித் துறையினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ஊரக வளர்ச்சித் துறையினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்


UPDATED : நவ 24, 2026 07:56 PM

ADDED : நவ 24, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 07:56 PM ADDED : நவ 24, 2026 07:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் துவக்கினர். பண்ருட்டி, அண்ணாகிராமம் ஊராட்சி செயலர் அருள்குமார் மீதான பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கடலுார் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், பணி மேற்பார்வையாளர்கள் சங்கம், ஊராட்சி செயலர்கள் கூட்டமைப்பு ஆகியன சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, கடலுார், குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம், பண்ருட்டி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், நல்லுார், கம்மாபுரம், மங்களூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று துவக்கினர்.

வட்டார வளர்ச்சி அதிகாரிகள், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் என, 900 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதன் காரணமாக மாவட்டத்தில் ‘வெற்றி’ இல்லம் கணக்கெடுத்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us