தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 19, 2026 07:06 PM

ADDED : நவ 19, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 07:06 PM ADDED : நவ 19, 2026 07:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சண்முகசிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கொளஞ்சி விளக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன் துவக்க உரையாற்றினார். வெங்கடேசன், வேலவன், சங்கர், தங்கதுரை வாழ்த்திப் பேசினர்.

தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 1,500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஏழரை ஆண்டுகள் பணி முடித்த பணி மேற்பார்வையாளர்களை இளநிலைப் பொறியாளர் நிலைக்கு தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ரவிச்சந்திரன் நன்றி கூறினார். முன்னதாக, அண்ணாகிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒறையூர் ஊராட்சி செயலர் அருள்குமார், கணினி ஆபரேட்டர் கணபதி ஆகியோர் மீது பதியப்பட்ட எஸ்.சி.,எஸ்.டி., வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us