தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வுக் கூட்டம்

 ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வுக் கூட்டம்

 ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வுக் கூட்டம்


ADDED : டிச 06, 2025 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2025 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கிராமப்புறங்களின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஊரக வளர்ச்சி துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 15வது நிதி குழு மானியம், துாய்மை பாரத இயக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக கிராம ஊராட்சிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவை குறித்து ஆய்வு நடந்தது.

மேலும், தெரு விளக்கு, தார் சாலை, சுடுகாடு, கழிவுநீர் கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாகவும், கிராம ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குதல், திட, திரவ கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரப் பணிகள், கிராமப்புற நூலகம் அமைத்தல், பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடங்களை சீரமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் கனவு இல்லம் திட்டம் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், வெவ்வேறு நிலைகளிலுள்ள வீடு கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும் கேட்டறியப்பட்டது.

மேலும் இத்திட்டத்திற்கு அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவில் குடியிருப்புகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

கட்டுமானப் பணிகளை துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்துத் திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் பிரியங்கா, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) வரதராஜபெருமாள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us