/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அலுவலகத்தில் துாங்குகிறது... முதல்வர் திட்ட முகாம் மனுக்கள்
/
அலுவலகத்தில் துாங்குகிறது... முதல்வர் திட்ட முகாம் மனுக்கள்
அலுவலகத்தில் துாங்குகிறது... முதல்வர் திட்ட முகாம் மனுக்கள்
அலுவலகத்தில் துாங்குகிறது... முதல்வர் திட்ட முகாம் மனுக்கள்
ADDED : அக் 02, 2024 03:38 AM
மக்களுடன் முதல்வர் திட்டத்தில், புவனகிரி ஒன்றியத்தில் மூலம் எறும்பூர், மஞ்சக்கொல்லை, லால்புரம், அழிச்சிகுடி மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய ஐந்து ஊராட்சியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதில் மேல்புவனகிரி ஒன்றியத்தில் இருந்து 47 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து நேரில் மனுக்கள் அளித்தனர். 15க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றனர்.
இந்நிலையில் வருவாய்த்துறை சார்ந்த மனுக்களுக்கு தீர்வு காணாமல், புவனகிரி தாலுகா அலுவலகத்தில் தேங்கியுள்ளது.
கலெக்டர் மற்றும் சப் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தால் இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான ரசீது வழங்குவர்.
இந்த முகாம்களில் இது போன்று பதிவு செய்யவோ மற்றும் ரசீது வழங்கவோ இல்லை. தற்போது கோரிக்கை மனு குறித்து விவசாரிக்க தாலுகா அலுவலகம் சென்றால் யாரிடம் மனு அளித்தீர்கள், எப்போது மனு அளித்தீர்கள் என தாலுகா அலுவலகத்தில் உள்ளவர்கள் விரட்டியடிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.
இதனால், முதல்வர் திட்ட முகாமில் கொடுத்தால் உடனடி தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மனு கொடுத்த பொதுமக்கள், யாரிடம் முறையிடுவது என, தவித்து வருகின்றனர்.