என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு சபாராஜேந்திரன் நன்றி தெரிவிப்பு
என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு சபாராஜேந்திரன் நன்றி தெரிவிப்பு
UPDATED : மே 24, 2026 09:10 PM
ADDED : மே 24, 2026 09:02 PM

நெய்வேலி: தி.மு.க.,விற்கு வாக்களித்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என முன்னாள் எம்.எல்.ஏ.,சபா ராஜேந்திரன் பேசினார்.
நெய்வேலி நகரப் பகுதியில், தி.மு.க.,வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் தனக்கு வாக்களித்த என்.எல்.சி., தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் பேசியதாவது:
நெய்வேலி நகரப் பகுதியில் எப்போதும் தி.மு.க.,விற்கு பெரும்பான்மையான வாக்குகளை என்.எல்.சி., தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் தி.மு.க.,வுக்கு தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க.,விற்கு வாக்களித்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சில குறிப்பிட்ட தரப்பினர் ஓட்டுக்களைப் பெறுவதில் நாம் தவறிவிட்டோம். இருப்பினும், தி.மு.க., முதன்மை சக்தியாக தொடர்ந்து செயல்படும். மேலும், என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் முதலில் குரல் கொடுக்கும் சங்கமாக நமது தொ.மு.ச., செயல்படும்.
75 ஆண்டு கால வரலாறு கொண்ட தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஒரே இயக்கம். தொடர்ந்து மக்களுடன் பயணிப்போம் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தண்டபாணி முன்னாள் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் பாலமுருகன், செயற்குழு உறுப்பினர் ராச வன்னியன், பொதுக்குழு உறுப்பினர்கள் புகழேந்தி, அறிவழகன், நெய்வேலி நகர் செயலாளர் குருநாதன், தொ.மு.ச., தலைவர் ஞானஒளி, பொருளாளர் அப்துல் மஜீத், அலுவலக செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
