/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறுவை நெல் அறுவடை பணிக்கு சாக்கு பைகள் சீரமைப்பு தீவிரம்
/
குறுவை நெல் அறுவடை பணிக்கு சாக்கு பைகள் சீரமைப்பு தீவிரம்
குறுவை நெல் அறுவடை பணிக்கு சாக்கு பைகள் சீரமைப்பு தீவிரம்
குறுவை நெல் அறுவடை பணிக்கு சாக்கு பைகள் சீரமைப்பு தீவிரம்
ADDED : செப் 20, 2025 07:19 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் குறுவை நெல் அறுவடை காரணமாக சணல் சாக்குப்பைகள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு நெல், எள், உளுந்து, மக்காச்சோளம், வேர்க்கடலை, ஆமணக்கு உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.
சீசன் காலங்களில் தினசரி 20 ஆயிரத்துக்கும் அதிகமான மூட்டைகள் குவிந்து விடும்.
இவற்றை தரம் பிரித்தல், விலை நிர்ணயம் செய்தல், எடைபோடுதல், சாக்கு மாற்றும் பணி காரணமாக கமிட்டி வளாகம் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், குறுவை அறுவடை தீவிரமடைந்த நிலையில் கமிட்டிக்கு வழக்கத்திற்கு மாறாக நெல் மூட்டைகள் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முயற்சியால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதால், விவசாயிகள் அருகில் உள்ள கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, குண்டு ரகம், ஏ.எஸ்.டி., 16, ஏ.டி.டீ., 37, கோ 51 (சன்னா ரகம்) ஆகியவை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகளவு கொள்முதல் செய்யப்படுகின்றன.
இதனால் விவசாயிகளுக்கு வாகன வாடகை, உணவு உள்ளிட்ட இதர செலவுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் அறுவடை செய்த நெல்லை சாக்கு மூட்டைகளில் மாற்ற வேண்டி, சணல் சாக்கு பைகள் தேவை அதிகரித்துள்ளது.
இதனால், விருத்தாசலத்தில் சணல் சாக்கு பைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
புதிய சாக்குகள் மட்டுமல்லாது பழைய சணல் சாக்கு பைகளை சீரமைத்து, புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
ஒரு சணல் சாக்கு பை 40 ரூபாய் வரை விற்பனையாகிறது.
மொத்தமாக வாங்கும்போது, 5 ரூபாய் வரை விலை குறைத்து வழங்குவதாக சாக்கு பை விற்பனையாளர்கள் கூறினர்.