/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
/
சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : மே 19, 2025 06:44 AM

மந்தாரக்குப்பம்: நெய்வேலி மந்தாரக்குப்பம் சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
நெய்வேலி சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவர்கள் பிளஸ் 2, பிளஸ்1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். 10ம் வகுப்பு பொது தேர்வில் மாணவி கோபிகா 487 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம், மதுமிதா 483 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், சுவராஜினி, 481 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம், வர்ஷா, நித்யா ரூபனி 480 மதிப்பெண் பெற்று நான்காமிடம் பிடித்தனர்.
பிளஸ் 2 தேர்வில் ஜெயஸ்ரீ 582 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம், ஹரிஹரன் 577 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், அக் ஷயா 565 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம், சந்தியா 564 மதிப்பெண் பெற்று நான்காமிடம், அபிநயா 550 மதிப்பெண் பெற்று ஐந்தாமிடம் பிடித்தனர்.
பிளஸ் 1 பொது தேர்வில் திணேஷ் 569 மதிப்பெண், கார்த்திகாயினி 552, அச்மாபேகம் 544, ஆர்த்திபிரியா 543, திவ்யா தர்ஷினி 543 மதிப்பெண் பெற்று முறை முதல் ஐந்து இடங்களை பிடித்தனர்.
சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் ராஜாராமன், நிர்வாக இயக்குநர்கள் மாறன், செந்தில்குமார், சீத்தாராமன், கார்த்திகேயன், பாரூக், ஆறுமுகம், சங்கீதா பிரியா ராஜாராமன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். பள்ளி முதல்வர் அமுதா, துணை முதல்வர்கள் சத்தியா, கனகராஜ் உடனிருந்தனர்.