/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்
/
மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்
ADDED : அக் 16, 2024 07:06 AM

பரங்கிப்பேட்டை ; வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை மீன்பிடி இறங்கு தளங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மற்றும் கிள்ளை முடசல் ஓடையில் மீன்பிடி இறங்கு தளம் உள்ளது. சுற்றியுள்ள சாமியார்பேட்டை, புதுக்குப்பம், சி.புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை, சின்னுார், கிள்ளை, முடசல் ஓடை, கூழையார், பட்டரையடி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு சென்று பிடித்து வரும் மீன்களை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் மீன் வியாபாரிகள் வாங்குவதுடன, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு தினமும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
அதையடுத்து, பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோர கிராம மீனவர்கள் தங்கள் விசைப்படகுகள், மோட்டார் படகுகளை கிள்ளை முடசல் ஓடை மீன் இறங்குதளம் மற்றும் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில், பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீன் வலைகளை, வலை பின்னும் கூடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் மீன் ஏற்றுமதி செய்யப்படாததால், எப்போதும் பிசியாக காணப்படும் மீன இறங்கு தளங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.