/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் சலங்கை பூஜை நிகழ்ச்சி
/
சிதம்பரத்தில் சலங்கை பூஜை நிகழ்ச்சி
ADDED : மார் 05, 2024 06:15 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் சித்ர லாஸ்யலயா நாட்டியப்பள்ளி மாணவர்களின் சலங்கை பூஜை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், 18 நாட்டிய மாணவர்களுக்கு, நாட்டிய குரு கோமதி சலங்கை பூஜை செய்து வைத்தார். அதையடுத்து, மாணவிகள் நாட்டிய அஞ்சலி செய்தனர்.
சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன், குமராட்சி ஒன்றிய சேர்மன் பூங்குழலி பாண்டியன், தில்லை ஸ்ரீ சிவகாமி நாட்டியபள்ளி குரு கலையரசி, தீஷிதர் செல்வரத்தினம், மூத்த வழக்கறிஞர் ராமதாஸ், தொழிலதிபர் அரிசக்தி, சுகந்தி அரிசக்தி ஆகியோர் நாட்டிய அஞ்சலி செய்த மாணவிகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.
காமராஜ் பள்ளி தாளாளர் கஸ்தூரி, முதல்வர் சக்தி, இன்ஸ்பெக்டர் அமுதா, அ.தி.மு.க நிர்வாகிகள் குமார், பாலமுருகன், சுந்தர், கானூர் பாலசுந்தரம், திருமாறன், பாசறை செயலாளர் சண்முகம், தில்லை கோபி, செந்தில்குமார், சுந்தரமூர்த்தி, ஜோதிபிரகாஷ், லதா ஜெகஜீவன் ராம், சுரேஷ் பாபு, மணிராஜ், சந்தோஷ், சுபம் கேஸ் நிர்வாக இயக்குனர் சித்தார்தன், ஷெம்போர்டு பள்ளி தாளாளர் ஹரி, கவுன்சிலர் சித்ரா, பலர் பங்கேற்று வாழ்த்தினர்.

