/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சலுான் கடை ஊழியர் தவறி விழுந்து சாவு
/
சலுான் கடை ஊழியர் தவறி விழுந்து சாவு
ADDED : டிச 20, 2024 11:30 PM
பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சலுான் கடை ஊழியர் இறந்தார்.
உத்தரகாண்ட் மாநிலம், கலக்ரா, காந்தி நகரை சேர்ந்தவர் ஜாரீப் அகமது மகன் முகமத் ரிகான், 18; இவர், பரங்கிப்பேட்டையில் உள்ள சலுான் கடையில் ஐந்து மாதமாக வேலை செய்து வந்தார்.
இவர், நேற்று காலை புவனகிரியில் இருந்து பைக்கில் பரங்கிப்பேட்டை நோக்கி வந்தார். ரயிலடி அருகே வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். விபத்தில், முகமத் ரிகான், தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து, சலுான் கடை உரிமையாளர் புருஷோத்தமன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறார்.