/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீக்குளித்த சலூன் கடைக்காரர் பலி; தற்கொலைக்கு தூண்டிய இருவர் கைது
/
தீக்குளித்த சலூன் கடைக்காரர் பலி; தற்கொலைக்கு தூண்டிய இருவர் கைது
தீக்குளித்த சலூன் கடைக்காரர் பலி; தற்கொலைக்கு தூண்டிய இருவர் கைது
தீக்குளித்த சலூன் கடைக்காரர் பலி; தற்கொலைக்கு தூண்டிய இருவர் கைது
ADDED : மார் 02, 2024 06:35 AM

விருத்தாசலம் : தீக்குளித்த சலுான் கடைக்காரர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், தற்கொலைக்கு துாண்டிய பிரிவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம், புதுக்குப்பம், மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் துரைராஜ்,49; ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே சலுான் கடை நடத்தி வந்தார்.
கடந்த 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு அங்குள்ள வெங்கட்ரமணன் என்பவரது ஓட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டார்.
மறுநாள் காலையில் பணம் தருவதாக கூறியதால் ஆத்திரமடைந்த வெங்கட்ரமணன், புரோட்டா மாஸ்டர் பாஸ்கர் ஆகியோர் ஆபாசமாக திட்டி, மிரட்டல் விடுத்தனர். பின், இரவு 10:00 மணிக்கு, துரைராஜ் வீட்டிற்கு வந்து அவரது மனைவி, மகளையும் ஆபாசமாக திட்டி, மிரட்டல் விடுத்தனர்.
அதில், மனமுடைந்த துரைராஜ், மறுநாள் காலையில் சலுான் கடை முன் தன் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது வாக்குமூலத்தின் பேரில், ஓட்டல் உரிமையாளர் வெங்கட்ரமணன்,54; புரோட்டா மாஸ்டர் சின்னவடவாடி ஏசுப்பிள்ளை மகன் பாஸ்கர்,28; ஆகியோர் மீது விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், தற்கொலைக்கு துாண்டுதல் பிரிவில் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தார்.
முன்னதாக, துரைராஜ் இறந்த வழக்கில், போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருத்தாசலம் நகரில் உள்ள சலுான் கடைகளை மூடிவிட்டு, ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாலக்கரையில் போராட்டத்திற்கு தயாராகினர்.
அவர்களிடம், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, சமதானம் செய்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால், விருத்தாசலத்தில் பரபரப்பு நிலவியது.

