sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சமத்துவபுரம் வீடு ஒதுக்கீடு : விண்ணப்பம் வரவேற்பு

/

சமத்துவபுரம் வீடு ஒதுக்கீடு : விண்ணப்பம் வரவேற்பு

சமத்துவபுரம் வீடு ஒதுக்கீடு : விண்ணப்பம் வரவேற்பு

சமத்துவபுரம் வீடு ஒதுக்கீடு : விண்ணப்பம் வரவேற்பு


ADDED : அக் 19, 2025 03:18 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: குறிஞ்சிப்பாடி ஒன்றியம், மேல்பூவாணிகுப்பம் சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

குறிஞ்சிப்பாடி அடுத்த மேல்பூவாணிக்குப்பத்தில் சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் புதிதாக 6.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 எண்ணிக்கையில் தனித்தனி வீடுகள் (ஒரு வீட்டிற்கு 300 ச.அ., வீதம்) அமைய உள்ள வீடுகளுக்கு பூவானிக்குப்பம் ஊராட்சியிலிருந்து தகுதியான வீடற்ற பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயனாளிகளை தேர்வு செய்வதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தலைமையில், குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), தாசில்தார், தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சமத்துவபுரத்தில் கட்டப்படும் வீடுகளில் 40சதவீதம் ஆதிதிராவிடர்களுக்கும், 25 சதவீதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 25 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் 10 சதவீதம் மற்றவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.

அனைத்து பிரிவினர்களிலும் 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களை குடும்பத் தலைவியாக கொண்ட குடும்பங்கள், முன்னாள் ராணுவத்தினர்.

ஓய்வு பெற்ற துணை ராணுவ உறுப்பினர்கள், ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகள் உள்ள குடும்பங்கள், திருநங்கைகள், டிபி போன்ற நோய்கள் சம்மந்தப்பட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சான்றளிக்கப்பட்ட நபர்கள், மனரீதியாக பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் தீ, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே, சமத்துவபுரத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசின் வீடு வழங்கும் திட்டங்களின் கீழ் பயனடையாத மற்றும் சொந்தமாக சிமென்ட் கான்கிரீட் வீடில்லாதவர்கள் தேர்வுக் குழுவினரிடம் விண்ணப்பங்களை வரும் நவம்பர் 5ம் தேதிக்குள் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us