/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு திடல் சீரமைக்க சமத்துவபுரம் மக்கள் கோரிக்கை
/
விளையாட்டு திடல் சீரமைக்க சமத்துவபுரம் மக்கள் கோரிக்கை
விளையாட்டு திடல் சீரமைக்க சமத்துவபுரம் மக்கள் கோரிக்கை
விளையாட்டு திடல் சீரமைக்க சமத்துவபுரம் மக்கள் கோரிக்கை
ADDED : ஜன 29, 2025 11:21 PM

திட்டக்குடி:   திட்டக்குடி அடுத்த தொளார் ஊராட்சி, சமத்துவபுரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு 2 ஆண்டுகளுக்கு முன் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சமத்துவபுரம் குடியிருப்பு சிறுவர்கள் விளையாட ஏதுவாக ஏற்றம், சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட தளவாட பொருட்களும், இளைஞர்கள் விளையாட வாலிபால், பேட்மிண்டன் மைதானம் அமைக்கப்பட்டது.
ஆனால் போதிய பராமரிப்பின்றி மைதானத்தில் முட்செடிகள் வளர்ந்து உபகரணங்கள் பாழாகிறது. மேலும், அப்பகுதி மக்கள் தங்களின் கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாக மாற்றி வருவதால் உபகரணங்கள் பாழாவதுடன் விளையாட்டுத் திடலை சிறுவர்கள், இளைஞர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தொளார் ஊராட்சி, சமத்துவபுரத்தில் பாழாகி வரும் விளையாட்டுத் திடலை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.