/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பில் தீவிரம்
/
டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பில் தீவிரம்
டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பில் தீவிரம்
டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பில் தீவிரம்
ADDED : ஆக 31, 2025 07:53 AM
கடலுார்: டெல்டா பகுதியில் ஒரு போக சம்பா சாகுபடியில் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டா பகுதியில் ஆள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறை சாகுபடியை விரும்புகின்றனர்.
செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் முடிய ஒரு போக சம்பா சாகுபடிக்கு இந்த ஆண்டு டெல்டாவில் போதிய கோடை மழை இல்லாததால், கோடை புழுதி உழவு செய்ய முடியாமல் கால தாமதமானது.
தென்மேற்கு பருவ மழை துவங்கிய நிலையில் டெல்டாவில் மழை பொழிவு ஏற்பட்டது. அதன் பின் விவசாயிகள் புழுதி உழுவு செய்து, மராமத்துப் பணிகளை துவங்கினர்.
டெல்டா பகுதியில் தென்மேற்கு பருவக் காற்று மழை வலுவடைந்துள்ள நிலையில் விவசாயிகள் சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பு பணியை கடந்த சில நாட்களாக துவங்கியுள்ளனர்.
காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம் டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடியில் தொடர்ந்து பயிர் செய்யப்பட்டு வரும் பி.ப்பி.டி., போன்ற பழைய நெல் ரகங்களில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மாற்று புதிய நெல் ரகத்தை தேர்வு செய்து விதைப்பு செய்கின்றனர்.
இந்த ஆண்டு 135 நாட்கள் கொண்ட ஜூனிம் அம்மன் என்ற ஆந்திர மாநில நெல் ரகம் அதிக அளவு பரப்பில் விதைப்பு செய்யப்படுகிறது.
சில விவசாயிகள் பி.ப்பி.டி, சாதனா, சி.ஆர்.1009, ஏ.டி.ட்டி 38, 42 போன்ற நெல் ரகங்களை விதைப்பு செய்கின்றனர்.
தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பு செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.