sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாதிரி தேர்வு துளிகள்

மாதிரி தேர்வு துளிகள்

மாதிரி தேர்வு துளிகள்


ADDED : ஏப் 28, 2025 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2025 06:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெறிமுறை கையேடு வழங்கல்


தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மதியம் உணவு, வாட்டர் பாட்டில் மற்றும் ஸ்பெக்ட்ரா வழிகாட்டு நெறிமுறை கையேடு வழங்கப்பட்டன. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் மாணவர்கள் மன நிறைவுடன், தங்கள் பெற்றோருடன் வீட்டிற்கு சென்றனர்.

தினமலர் நாளிதழ் சார்பில் தேர்வு நடந்த பள்ளி முதல்வர் பேராசிரியர் நடராஜன், ஸ்பெக்ட்ரா அகாடமி பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி நன்றி தெரிவிக்கப்பட்டது.

பள்ளி நிர்வாகிகள் கவுரவிப்பு


கடலுாரில் தினமலர் நாளிதழ் சார்பில் தேர்வு நடந்த தேர்வு மையத்தில் பள்ளி முதல்வர் பேராசிரியர் நடராஜன், ஸ்பெக்ட்ரா அகாடமி பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி நன்றி தெரிவிக்கப்பட்டது.

விருத்தாசலத்தில் ஜெயப்பிரியா கல்வி குழும இயக்குனர் தினேஷ், ஜெயப்பிரியா சீனியர் செகண்டரி (சி.பி.எஸ்.சி.,) பள்ளி முதல்வர் நித்யா, அலன் நீட் பயிற்சி மைய தலைவர் ஆயுஷ் கிங், மார்க்கெட்டிங் மேனேஜர் ஜிதேந்திர் ஆகியோர் தினமலர் நாளிதழ் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.

பள்ளி நிர்வாகம் உணவு ஏற்பாடு


நெடுந்துாரத்தில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். தேர்வு முடித்த பின் வெளியே வந்த மாணவர்கள், பெற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

கடைசி நேர பதட்டம் வேண்டாமே


மாதிரி நீட் தேர்வு காலை 10:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு, 9:00 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருந்தது. இதை பெரும்பாலான மாணவர்கள் கடைபிடித்து நேரத்திற்கு மையத்திற்கு வந்திருந்தனர்.

சில மாணவர்கள் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஓடி வந்து தேர்வு எழுத வந்தனர். மாதிரி நுழைவுத்தேர்வு என்பதாலும், மாணவர்கள் இத்தேர்வு மூலம் பயிற்சி பெற வேண்டுமென்பதற்காகவும், தேர்வெழுத அனுமதிக்கப்பட்டது. ஆனால் இதே தவறை, மே., 4 ம் தேதி நடக்கும் நுழைவுத்தேர்விலும் செய்துவிட வேண்டாம். உரிய காலத்திற்குள் தேர்வறையில் இருந்தால் தான், இறுதி நேர பயம், படபடப்பில் இருந்து விடுபட்டு ரிலாக்ஸாக தேர்வெழுத முடியும்.

'நீட்'தேர்வு எத்தனை மணிக்கு துவங்குகிறது என்பதை கணக்கிட்டு, ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்பதை மாணவ, மாணவிகள் மறக்க வேண்டாம்.

தேர்வுக்கு இதை கொண்டு போகாதீங்க


நீட் தேர்வு மையத்திற்குள் மாணவ மாணவிகள் வாட்ச் அணிந்து வரக் கூடாது. மொபைல் போன் எடுத்து வரக் கூடாது. வளையல், கம்பல், மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்கள், ேஹர்பின், ேஹர் கிளிப் அணிந்து வர தடையுள்ளது. இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் சில மாணவிகள், அதே தவறை செய்தனர்.

இவர்களுக்கு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. தொடர்ந்து மாணவிகள் ேஹர்பின், ேஹர் கிளிப் ஆகியவற்றை கழற்றி வைத்துவிட்டு, நுழைவு தேர்வை எழுத சென்றனர். மொபைல் போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஒப்படைத்து விட்டு மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்குள் சென்றனர்.

தன்னம்பிக்கை கிடைத்தது


விருதத்தாசலம் பகுதியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வித் துறை சார்பில் நீட் நுழைவு தேர்வினை எழுத பள்ளி கல்வித் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு ஆர்வமாக எழுதினர். தினமலர் நீட் தேர்வு மூலம் தன்னம்பிக்கை பெற்றதாக தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us