/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சக்கரத்தாழ்வார் கோவிலில் பிப்.,10ல் ஸம்ப்ரோக்ஷணம்
/
சக்கரத்தாழ்வார் கோவிலில் பிப்.,10ல் ஸம்ப்ரோக்ஷணம்
ADDED : பிப் 06, 2025 06:34 AM
கடலுார்; கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவிலில், வரும் 10ம் தேதி ஸ்ம்ப்ரோக்ஷணம் நடக்கிறது.
கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பத்தில் சுயம்புவாக உருவான சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது. இறைவன் துாண் வடிவில் மூலவராக காட்சி தருகிறார். ஷட்கோண சக்கரம் எனும் அறுகோணத்தின் மத்தியில், பதினாறு கரங்களுடன் உற்சவர் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் மட்டுமே சக்கரத்தாழ்வார், மலைமீது அமர்ந்துள்ளார். இக்கோவில் ஸம்ப்ரோக்ஷணம் வரும் 10ம் தேதி நடக்கிறது.
விழாவை முன்னிட்டு, 9ம் தேதி வாஸ்துசாந்தி பூஜைகள், யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. 10ம் தேதி காலை 10:00 மணியளவில் ஸம்ப்ரோக்ஷணம் நடக்கிறது.
ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணைஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், கோவில் செயல்அலுவலர் வெங்கடகிருஷ்ணன், தக்கார் சந்திரவேணி மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்து வருகின்றனர்.