ADDED : அக் 27, 2024 04:29 AM
காட்டுமன்னார்கோவில், : மா.ஆதனுாரில் ஆற்று மணல் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த மா.ஆதனுாரைச் சேர்ந்தவர் செல்லதுரை மகன் செந்தமிழன், 19; மாயக்கண்ணன் மகன் குணபாலன், 20. இருவரும் கொள்ளிடம் ஆற்றில் சிமென்ட் சாக்குகளில் மணலை திருட்டுத்தனமாக அள்ளி, ராஜன்வாய்க்கால் கரையோரம் உள்ள செல்லியம்மன் கோவிலில் அடுக்கி வைத்து, மூட்டை 70 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.
தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணல் திருடி விற்ற செந்தமிழன், குணபாலனை கைது செய்தனர்; 113 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
அதேப்போல் சிறுகாட்டூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுத்து பைக்கில் கடத்தி சென்று விற்பனை செய்து வந்த அல்லியூர் பிரபாகரன் 35; ஆச்சாள்புரம் கலைச்செல்வன் 28; முருகன் 34; மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்தனர். மணல் கடத்த பயன்படுத்திய மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர்.