ADDED : ஜூன் 07, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் உழவர் சந்தை நுழைவு வாயிலில் குவிந்துள்ள குப்பை கழிவுகளால் பொதுமக்கள், விவசாயிகள் அவதியடைகின்றனர்.கடலுார் திருப்பாதிரிபுலியூரில், உழவர் சந்தை இயங்கி வருகிறது.
விவசாயிகள் அறுவடை செய்த காய்கறி, பழங்கள் நேரடியாக விற்பனை செய்து பயன்பெற்று வருகின்றனர். பொதுமக்களும் பெரிதும் பயனடைகின்றனர்.இந்நிலையில், உழவர் சந்தையின் பின்புறத்தில் உள்ள நுழைவு வாயிலில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் தொடர் மழையால், சேறும் சகதியுமாக மாறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, உழவர் சந்தை பின்புறம் நுழைவு வாயிலில் உள்ள குப்பை கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.