/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துப்புரவு ஊழியர்கள் மாநகராட்சியில் போராட்டம்
/
துப்புரவு ஊழியர்கள் மாநகராட்சியில் போராட்டம்
ADDED : ஆக 12, 2025 02:01 AM
கடலுார்: கடலுார் மாநகராட்சியில் துப்புரவு ஊழியர்கள் சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி போராட்டம் நடத்தினர்.
கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் துப்புரவு ஊழியர்கள் மூலம் குப்பைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
மேலும், தனியார் நிறுவனம் மூலமாகவும் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு ஊழியர்கள் குப்பை அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி நேற்று காலை 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த பெண் துப்புரவு ஊழியர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த தனியார் நிறுவனத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையேற்று துப்புரவு ஊழியர்கள் கலைந்து சென்றனர்.