/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாய்மை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
துாய்மை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 18, 2025 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கடலுார் மாவட்ட துாய்மை பணியாளர் சங்கம் மற்றும் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., (எம்.எல்) மாவட்ட செயலாளர் ராஜசங்கர், மாநில செயலாளர் தனவேல் கண்டன உரையாற்றினர்.
தமிழகம் முழுவதும் துாய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

