ADDED : நவ 22, 2025 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் சாலக்கரை மாரியம்மன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு சங்காபிஷேகம் நடந்தது.
கடலுார், மஞ்சக்குப்பம் சாலக்கரை மாரியம்மன் கோவிலில் சபரிகிரீச சஜ்ஜன சேவா சங்கம் சார்பில் ஐயப்ப சுவாமிக்கு மண்டல மகர விழா பூஜை கடந்த 17ம் தேதி துவங்கியது.
இதனை முன்னிட்டு நேற்று ஐயப்ப சுவாமிக்கு கணபதி பூஜை, சாஸ்தா ேஹாமம், 108 வலம்புரி சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 30ம் தேதி காலை 8:00 மணிக்கு பால்குட ஊர்வலம், மகா அபிஷேகம், 7ம் தேதி காலை 8:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

