ADDED : ஜன 17, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் கோவில்களில் சங்கடஹரசதுர்த்தி பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் சொக்கநாதர்,செங்கழுநீர் விநாயகர்,செல்வவிநாயகர்,ஜோதி விநாயகர் ஆகிய கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.
பூஜையை முன்னிட்டு விநாயகர் உற்சவர் மற்றும் மூலவருக்கு நேற்று மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
அதனை தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.