ADDED : ஏப் 17, 2025 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் நடந்தது.
நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் மூலவரும், உற்சவர் ஊஞ்சல் உற்சவத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேப் போன்று, அருள் தரும் ஐயப்ப சுவாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.