ADDED : நவ 26, 2024 06:52 AM
அ நிறம் | அளவு
பெண்ணாடம்: முருகன்குடி வள்ளலார் பணியகம் சார்பில், வள்ளலார் மாத பூசத்தையொட்டி சன்மார்க்க கருத்தரங்கு நடந்தது.
வள்ளலார் பணியக பொறுப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தெய்வ தமிழ்ப்பேரவை பூவனூர் தனபால் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கனகசபை வரவேற்றார். ஓய்வுபெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தர்மலிங்கம், சிவகாமி, ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், பிரகாஷ், பொறுப்பாளர் மணிவண்ணன், வித்யா, கனிமொழி, பாலா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், வள்ளலார் பணியக செயலாளர் பிரதாபன், பெரங்கியம் நாட்டு வைத்தியர் வரதராஜன், முனைவர் சுப்ரமணியசிவா ஆகியோர் 'சுத்த சன்மார்க்க விளக்கம்' மற்றும் 'வள்ளலாரின் கொள்கைகள்' ஆகிய தலைப்புகளில் பேசினர்.
ரத்தினகுமார் நன்றி கூறினார்.
