ADDED : அக் 20, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுாரில் தமிழ்நாடு நீர், நிலவளத்துறை, பரவனாறு உப வடிநில பகுதி மாதிரி கிராமத்தில் மரக்கன்று நடுவிழா நடந்தது.
நிகழ்ச்சியில் கடலுார் மீன்வளத்துறை துணை இயக்குனர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மீன்துறை உதவி ஆய்வாளர் கார்த்திக் வரவேற்றார். பரங்கிப்பேட்டை உதவி இயக்குனர் ரம்யாலட்சுமி, மீன்துறை ஆய்வாளர் அனுசியா, பாசனப்பிரிவு உதவி பொறியாளர் படைகாத்தான், வேளாண் உதவி இயக்குனர் முகமதுநிஜாம், ஊராட்சி தலைவர் பிரபுதாஸ் முன்னிலை வகித்தனர்.மீன்வளத்துறை இணை இயக்குனர் வேல்முருகன் ஊராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
துப்புரவு தொழிலாளர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.