UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 06:26 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் மண்டல அலுவலகம் சார்பில் மரக்கன்று நடப்பட்டது.
‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற முன்னெடுப்பின் கீழ் நடந்த நிகழ்ச்சியில் புள்ளியியல் அலுவலக உதவி இயக்குனர் இம்ரான் ஆலம் தலைமை தாங்கினார். புள்ளியியல் அலுவலர்கள், ஊழியர்கள், மாநகராட்சி மேலாளர் பாலாஜி, சுகாதார ஆய்வாளர் சந்திரபாலு உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல் மற்றும் நடப்பட்ட மரக்கன்றுகளை முறையாகப் பராமரித்து வளர்ப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், பசுமையான மற்றும் துாய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க தொடர்ந்து பங்களிப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
