/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்
/
சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்
ADDED : ஏப் 28, 2025 06:05 AM

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையொட்டி மூலவர் பெருமாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையொட்டி காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்தது. திருக்கண்ணாடி அறையில் உற்சவர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை. இரவு 9:30 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. மூலவர் பெருமாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

