ADDED : செப் 09, 2026 06:13 PM
சேத்தியாத்தோப்பு, செப்.10–
சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சேலம் மாவட்டம் ஆத்துாரில் நடந்த மாநில அளவிலான சதுரங்க போட்டியில் சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் 21 பேர் பங்கேற்றனர்.
மாணவர்கள் திறம்பட விளையாடி சிறப்பான புள்ளிகளை பெற்று பல்வேறு பரிசுகளை வென்றனர். மாணவர்கள் திறம்பட விளையாடியதை பாராட்டி ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா பள்ளி சிறந்த பள்ளிக்கான சிறப்பு விருதினை பெற்றது.
மாணவர்களின் திறனை வெளிக் கொண்டு வந்த பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை பள்ளி தாளாளர் சரவணன் பாராட்டி பரிசு சான்றுகளை கேடயங்களை வழங்கினார்.
பள்ளி முதல்வர் ரேணுகா முன்னிலை வகித்தார். தாளாளர் சரவணன் பயிற்சியாளர் தினேஷிற்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
