தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சஷ்டி வழிபாடு

சஷ்டி வழிபாடு

சஷ்டி வழிபாடு


ADDED : மார் 15, 2024 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: சஷ்டியொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

இதனை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணியளவில் பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

மாலை 4:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், திரவியப்பொடி ஆகியவைகளால் சிறப்பு அபிேஷகம்; மாலை 5:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

இதேபோன்று, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில், பெண்ணாடம் காமராஜர் வீதி, பாலதண்டாயுதபாணி ஆகிய கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us