தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விளைநிலம் காப்போம் நிகழ்ச்சி

விளைநிலம் காப்போம் நிகழ்ச்சி

விளைநிலம் காப்போம் நிகழ்ச்சி


UPDATED : நவ 13, 2026 06:30 PM

ADDED : நவ 13, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 06:30 PM ADDED : நவ 13, 2026 06:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், கடலுார், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் வட்டாரத்தில் உள்ள நடுவீரப்பட்டு, வட்டத்துார், புதுக்கூரைப்பேட்டை கிராமங்களில், விளைநிலம் காப்போம் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியை, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் துவக்கி வைத்து, மண்வளம் பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கினார்.

பேராசிரியர்கள் கண்ணன், சிவசங்கர், கலைச்செல்வி நிலங்களின் சத்துக்களுக்கு ஏற்றவாறு உர பரிந்துரை, யூரியா, டி.ஏ.பி அதிகமாக பயன்படுத்துவதால் நிலத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர்.

மேலும், உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள், தொழு உரங்கள் பயன்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் மண்ணில் பேரூட்டம் மற்றும் நுண்ணுாட்ட சத்துக்கள் மேம்பாடு மற்றும் மண்ணிற்கு உரமிடும்போது மண்வள அட்டையில் பரிந்துரைத்த உர பரிந்துரைகளை மேற்கொள்ள வலியுறுத்தினர்.வேளாண் அலுவலர்கள் மத்திய, மாநில திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us